வில்வித்தையில் வெள்ளி பதக்கம் வென்ற மதுமிதா குமாரிக்கு ₹.10 லட்சம் பரிசு தொகை அறிவிப்பு

ஆசிய விளையாட்டு போட்டியின் வில்வித்தையில் வெள்ளி பதக்கம் வென்ற ஜார்க்கண்ட் வீராங்கனை மதுமிதா குமாரிக்கு முதல் மந்திரி ₹.10 லட்சம் பரிசு தொகை அறிவித்துள்ளார்.
வில்வித்தையில் வெள்ளி பதக்கம் வென்ற மதுமிதா குமாரிக்கு ₹.10 லட்சம் பரிசு தொகை அறிவிப்பு
Published on

ராஞ்சி,

இந்தோனேசியாவில் நடந்து வரும் 18வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் முஸ்கான் கிரார், மதுமிதா குமாரி மற்றும் ஜோதி சுரேகா வென்னம் ஆகியோர் கொண்ட இந்திய மகளிர் வில்வித்தை அணி கொரிய அணியுடன் இறுதி போட்டியில் இன்று விளையாடியது.

இதில், 228-231 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி கொரியாவிடம் தோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணிக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது. கொரிய அணி தங்கம் வென்றது.

இந்த நிலையில், ஜார்க்கண்ட மாநில முதல் மந்திரி ரகுபர் தாஸ் பதக்கம் வென்ற வீராங்கனை மதுமிதாவுக்கு .10 லட்சம் பரிசு தொகை அறிவித்துள்ளார்.

இதுபற்றி வெளியிடப்பட்டு உள்ள அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றில், அவரது சாதனைக்காக நாடு பெருமை அடைகிறது.

ஜார்க்கண்ட் வீராங்கனை நாட்டையும் மற்றும் மூவர்ண கொடியையும் பெருமை அடைய செய்துள்ளார். இந்த சாதனைக்காக அரசு அவருக்கு ஊக்க தொகையாக .10 லட்சம் வழங்குகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜார்க்கண்டின் மகள்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஊக்கம் அளிப்பவராக ஆகி இருக்கிறீர். கடினமுடன் உழையுங்கள். நாட்டிற்கும் மற்றும் மாநிலத்திற்கும் புகழை கொண்டு வாருங்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com