ஜூனியர் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்; தன்வி பாத்ரி 'சாம்பியன்'

இறுதிப்போட்டியில் இந்தியாவின் தன்வி பாத்ரி, வியட்நாமின் ஹூடென் நுயெனை சந்தித்தார்.
image courtesy; @BAI_Media
image courtesy; @BAI_Media
Published on

செங்டு,

ஜூனியர் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் உள்ள செங்டு நகரில் நடைபெற்றது. இதில் நேற்று நடந்த 15 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் தன்வி பாத்ரி, வியட்நாமின் ஹூடென் நுயெனை சந்தித்தார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தன்வி பாத்ரி 22-20, 21-11 என்ற செட் கணக்கில் வியட்நாமின் ஹூடென் நுயெனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com