

சுசோ,
ஜூனியர் (17 வயதுக்கு உட்பட்டோர்) பெண்கள் ஆசிய கோப்பை கால் பந்து போட்டி சீனாவின் சுசோ நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற் றுள்ள 12 அணிகள் 3 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் 3-வது இடம் பெறும் இரண்டு சிறந்த அணிகள் காலிறு திக்கு தகுதி பெறும்.
இதில் 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இந்திய அணி 0-2 என்ற கோல் கணக்கில் வலுவான ஆஸ்திரேலியாவிடம் போராடி வீழ்ந்தது.
இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான ஜப் பானை நாளை மறுநாள் சந்திக்கிறது.