எனக்கு ஏன் இப்படி நடந்தது...? நடுவர்களின் ஒருதலைபட்சமான முடிவால் தோல்வி , நீதி கேட்கும்- மேரி கோம்

நடுவர்களின் நியாயமற்ற ஒருதலைபட்சமான முடிவால் அடைந்த தோல்விக்கு நிச்சயம் நீதி கேட்பேன் என்று மேரி கோம் கூறியுள்ளார்.
எனக்கு ஏன் இப்படி நடந்தது...? நடுவர்களின் ஒருதலைபட்சமான முடிவால் தோல்வி , நீதி கேட்கும்- மேரி கோம்
Published on

புதுடெல்லி

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய மூத்த வீராங்கனை மேரிகோம், கொலம்பியாவின் இன்கிரிட் வலென்சியாவை சந்தித்தார். 2-வது முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு படையெடுத்த மேரிகோமுக்கு இது கடைசி ஒலிம்பிக் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் அனுபவம் வாய்ந்த மேரிகோமுக்கு, ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றவரான 32 வயதான வலென்சியா கடும் சவால் அளித்தார்.

முதல் ரவுண்டில் வலென்சியா தாக்குதல் தொடுப்பதில் வெற்றி கண்டு நடுவர்களின் கவனத்தை ஈர்த்து முன்னிலை வகித்தார். அடுத்த ரவுண்டில் மேரிகோம் தனது வியூகத்தை மாற்றி ஆக்ரோஷமாக எதிராளிக்கு குத்துகள் விட்டு பதிலடி கொடுத்தார். கடைசி ரவுண்டில் இருவரும் சரமாரியாக குத்துகளை பரிமாறினார்கள். இருப்பினும் நடுவர்களின் முடிவின்படி வலென்சியா 3-2 என்ற கணக்கில் மேரிகோமை வீழ்த்தியதாக அறிவிக்பட்டார்.

டேக்கியே ஒலிம்பிக் குத்துச்சண்டை பேட்டியில் நடுவர்களின் நியாயமற்ற ஒருதலைபட்சமான முடிவால் தேல்வி அடைந்ததாக மேரி கேம் புகார் தெரிவித்துள்ளார்.மேலும் ஒலிம்பிக் தூதர் பெறுப்பை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

மேரி கேம் வெற்றியாளர் எனவும், நடுவர்களின் புள்ளி கணக்கிடும் முறை வருத்தம் அளிப்பதாகவும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தனது டுவிட்டரில் மேரி கோம் எனக்கு ஏன் இப்படி நடந்தது...? என்று யாராவது விளக்க முடியுமா...? மேரி கோம் என பெயரிடப்பட்டு இருந்த ஜெர்ஸி கடைசி நேரத்தில் மாற்றபட்டது. முதல் பெயர் மட்டும் தான் இடம் பெற வேண்டும் என கடைசி நிமிடத்தில் பெயர் இல்லாத வேறு ஜெர்ஸியை கொடுத்தனர் என கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com