கபடி மாஸ்டர்ஸ் 2018: கென்யாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

கபடி மாஸ்டர்ஸ் தொடரில் கென்யாவுக்கு எதிரான ஆட்டத்தில் 50-15 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. #KabaddiMastersDubai2018
கபடி மாஸ்டர்ஸ் 2018: கென்யாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி
Published on

துபாய்,

துபாயில் கபடி மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா, அர்ஜென்டினா, கென்யா ஆகிய ஆறு அணிகள் பங்கேற்றுள்ளன.

முன்னதாக நடைபெற்ற லீக் ஆட்டங்களில் பாகிஸ்தான் மற்றும் கென்யா அணிகளை வீழ்த்தி இந்திய அணி முன்னிலை பெற்றிருந்தது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா மற்றும் கென்யா அணிகள் மோதின. இதில் துவக்கத்திலிருந்தே இந்திய அணியினர் ஆட்டத்தில் அனல் பறந்தது. இதன்மூலம் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் 29-5 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியிலும் இந்திய அணியினரின் ஆதிக்கம் தொடர்ந்தது. இறுதியில் இந்திய அணி 50-15 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com