கிளிமஞ்சாரோ மலையை 22 மணி 36 நிமிடங்களில் ஏறி இறங்கிய இந்திய வீராங்கனை... கவிதா சந்த் சாதனை

தான்சானியாவில் அமைந்துள்ள கிளிமஞ்சாரோ மலையின் உயரம் 5,895 மீட்டர்.
கவிதா சந்த்
Published on: 

புதுடெல்லி,

இந்தியாவின் மலை ஏறும் வீராங்கனையான கவிதா சந்த், ஆப்பிரிக்காவின் மிக உயரமான மலையான கிளிமஞ்சாரோவை 22 மணி நேரம் 36 நிமிடங்களில் ஏறி இறங்கி சாதனை படைத்துள்ளார்.

12 மணி 46 நிமிடங்கள்

தான்சானியாவில் அமைந்துள்ள கிளிமஞ்சாரோ மலையின் உயரம் 5,895 மீட்டர். இந்த மலையின் உச்சியில் உள்ள உஹுரு சிகரத்தை அடைவதற்காக கவிதா சந்த் முவேகா கேட் பகுதியில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கினார்.

நவம்பர் 5-ம் தேதி உள்ளூர் நேரப்படி மாலை 6.08 மணிக்கு உஹுரு சிகரத்தை அடைந்தார். இதற்காக 12 மணி நேரம் 46 நிமிடங்கள் எடுத்துக்கொண்டார்.

22 மணி 36 நிமிடங்கள்

மலையின் உச்சியை அடைந்த கவிதா சந்த், அங்கிருந்து மீண்டும் முவேகா கேட் பகுதிக்குத் திரும்பினார். ஏறுவது, இறங்குவது என மொத்தம் 22 மணி நேரம் 36 நிமிடங்களில் இந்தப் பயணத்தை நிறைவு செய்தார்.

பொதுவாக கிளிமஞ்சாரோ மலையை ஏறுவதற்கு 5 முதல் 9 நாட்கள் வரை தேவைப்படும். உயரமான இடங்களில் நிலவும் குறைந்த ஆக்சிஜன் அளவுக்கு உடலைப் பழக்கப்படுத்துவதற்காக மலையேறுபவர்கள் பல நாட்கள் எடுத்துக்கொள்வார்கள். ஆனால் கவிதா சந்த் ஒரே நாளில் இந்தப் பயணத்தை முடித்து அசத்தியுள்ளார்.

கிளிமஞ்சாரோ மலையில் படைத்துள்ள இந்த சாதனை அவரது மலை ஏறும் பயணத்தில் மற்றொரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.

X