

சன்சியான்,
கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தென்கொரியாவின் சன்சியான் நகரின் பால்மா ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகளான லக்ஷயா சென், எச்.எஸ். பிரணாய், கிடாம்பி ஸ்ரீகாந்த், பி.வி. சிந்து, சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டிஉள்ளிட்டோர் விளையாடுகின்றனர்.
இந்த நிலையில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி இணை தென் கொரியாவின் டே யாங் ஷின் - வாங் சான் இணையுடன் மோதியது.
36 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி 21-16, 21-15 என்ற செட் கணக்கில் டே யாங் ஷின் - வாங் சான் ஜோடியை வீழ்த்தி வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியது.