

நுர்பர்க்,
இங்கிலாந்தைச் சேர்ந்த 35 வயதான லூயிஸ் ஹாமில்டன் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற பார்முலா 1 கார்பந்தைய போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
7-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் இவர், தற்போது ஜெர்மனியின் மைக்கேல் ஷூமேக்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
2008, 2014, 2015, 2017, 2018,2019 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். 2008ல் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற லூயிஸ், பார்முலா 1 இல் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை மிக இளம் வயதில் வென்ற வீரர் என்ற சிறப்புக்குச் சொந்தக்காரர் ஆனார்.
இந்த வெற்றி குறித்து லூயிஸ் ஹாமில்டன் கூறியதாவது:-
மிகப்பெரிய கனவுகளை அடைய முடியாது என நினைக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் இந்த வெற்றி ஒரு உதாரணமாக இருக்கும். நிச்சயம் உங்களால் முடியும். உங்கள் இலக்குகளை எட்ட கடினமாக உழைக்க வேண்டும், உங்கள் கனவுகளை ஒருபோதும் கைவிடக்கூடாது. உங்களை ஒருபோதும் சந்தேகிக்க வேண்டாம் என்றார்.