மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: உக்ரைன் வீராங்கனை சாம்பியன்

உக்ரைன் வீராங்கனை மார்த்தா கோஸ்ட்யுக், மிரா ஆன்ட்ரீவாவுடன் (ரஷியா) மோதினார்.
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: உக்ரைன் வீராங்கனை சாம்பியன்
Published on

மாட்ரிட்,

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டியில் உக்ரைன் வீராங்கனை மார்த்தா கோஸ்ட்யுக், மிரா ஆன்ட்ரீவாவுடன் (ரஷியா) மோதினார். 1 மணி 21 நிமிடம் நடந்த ஆட்டத் தில் கோஸ்ட்யுக் 6-3, 7-5 என்ற நேர்செட்டில் மிரா ஆன்ட்ரீவாவுக்கு அதிர்ச்சி அளித்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். 1,000 தரவரிசை புள்ளிகள் கொண்ட போட்டியில் கோஸ்ட்யுக் சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதல்முறையாகும். கோஸ்ட்யுக்குக்கு ரூ.11 கோடி பரிசாக வழங் கப்பட்டது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஜானிக் சினெர் (இத்தாலி)-அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) மோது கின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com