மலேசிய ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் பிவி சிந்து வெற்றி

பி.வி.சிந்து, சீன தைபேயின் சங் ஷோ யூனை எதிர்கொண்டார்.
கோலாலம்பூர்,
மலேசிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, சீன தைபேயின் சங் ஷோ யூனை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பிவி சிந்து 21-14, 22-20 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி இணை 21-13, 21-15 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் யாங் போ ஹூன்-லி ஜி ஹூய் ஜோடியை தோற்கடித்தது.
Related Tags :
Next Story






