தேசிய தடகள போட்டி: தமிழக அணியில் 79 வீரர், வீராங்கனைகள்


தேசிய தடகள போட்டி: தமிழக அணியில் 79 வீரர், வீராங்கனைகள்
x

தமிழக அணியில் 43 வீரர்களும் 36 வீராங்கனைகளும் இடம் பெற்றுள்ளனர்.

சென்னை,

64-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று முதல் 24-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக அணியில் பிரவீன் சித்ரவேல், ராகுல்குமார், ராஜேஷ், தமிழ் அரசு, சந்தோஷ், விஷால் உள்பட 43 வீரர்களும், தனலட்சுமி, அபினயா, வித்யா ராம்ராஜ் உள்பட 36 வீராங்கனைகளும் இடம் பெற்றுள்ளனர்.

கடும் பயிற்சி எடுத்துள்ள அவர்கள், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வெல்வார்கள் என்று நம்புவதாக தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் லதா தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story