தேசிய பேட்மிண்டன்: சுருதி, தன்வி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்


தேசிய பேட்மிண்டன்: சுருதி, தன்வி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
x

சுருதி முன்டாடா, ஜியா ராவத்தை எதிர்கொண்டார்.

விஜயவாடா,

87-வது தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையரில் நடந்த ஒரு ஆட்டத்தில் சுருதி முன்டாடா, ஜியா ராவத்தை எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்தி சுருதி முன்டாடா 21-14, 21-19 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

இதே போல் தன்வி பத்ரி 22-20, 21-19 என்ற நேர் செட்டில் இஷாரானி பாருவாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு எட்டினர்.

1 More update

Next Story