தேசிய கூடைப்பந்து போட்டி: தொடக்க ஆட்டத்தில் தமிழக ஆண்கள் அணி வெற்றி

தேசிய கூடைப்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் தமிழக ஆண்கள் அணி வெற்றிபெற்றது.
தேசிய கூடைப்பந்து போட்டி: தொடக்க ஆட்டத்தில் தமிழக ஆண்கள் அணி வெற்றி
Published on

சென்னை,

71-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. வருகிற 10-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 16 அணிகளும், பெண்கள் பிரிவில் 15 அணிகளும் பங்கேற்றுள்ளன.

சி பிரிவில் அங்கம் வகிக்கும் தமிழக ஆண்கள் அணி தொடக்க ஆட்டத்தில் டெல்லியை சந்தித்தது. அபாரமாக ஆடிய தமிழக அணி 85-47 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. தமிழக அணியில் பாலதனேஷ்வர் 15 புள்ளிகளும், அரவிந்த் 14 புள்ளிகளும் எடுத்தனர்.

பெண்கள் பிரிவில் தமிழக அணி தனது முதல் லீக்கில் (ஏ பிரிவு) 62-100 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் இந்தியன் ரெயில்வேயிடம் தோல்வியை தழுவியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com