கோவாவில் தேசிய விளையாட்டு போட்டி இன்று தொடக்கம்

தேசிய விளையாட்டு போட்டி கோவாவில் இன்று தொடங்குகிறது.
கோவாவில் தேசிய விளையாட்டு போட்டி இன்று தொடக்கம்
Published on

கோவா,

37-வது தேசிய விளையாட்டு போட்டி இன்று முதல் அடுத்த மாதம் 9-ந்தேதி வரை கோவாவில் நடக்கிறது. அங்கு 5 இடங்களில் நடைபெறும் இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். தடகளம், நீச்சல், துப்பாக்கி சுடுதல், கூடைப்பந்து, கபடி, குத்துச்சண்டை, கைப்பந்து, மல்யுத்தம், யோகாசனம் உள்பட 43 வகையான விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் இருந்து 446 பேர் கொண்ட குழு அனுப்பப்பட்டுள்ளது.

படோர்டாவில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் மாலை 6.30 மணிக்கு கண்கவர் கலைநிகழ்ச்சியுடன் தொடக்க விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். போட்டி இன்று அதிகாரபூர்வமாக தொடங்கினாலும், ஏற்கனவே சில விளையாட்டுகள் ஆரம்பித்து நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com