தேசிய விளையாட்டு: தங்கம் வென்ற தமிழக வீராங்கனை


தேசிய விளையாட்டு: தங்கம் வென்ற தமிழக வீராங்கனை
x

தேசிய விளையாட்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் 7 நகரங்களில் நடந்து வருகிறது

டேராடூன்,

38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தரகாண்ட் மாநிலத்தில் 7 நகரங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் தடகள போட்டியில் நேற்று நடந்த பெண்களுக்கான போல்வால்ட் (கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல்) பந்தயத்தில் தமிழக வீராங்கனைகள் பவித்ரா வெங்கடேஷ் (3.95 மீட்டர்) தங்கப்பதக்கமும், பரனிகா இளங்கோவன் (3.90 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும் தட்டிச் சென்றனர். கேரள வீராங்கனை மரியா ஜெய்சன் (3.90 மீட்டர்) வெண்கலப்பதக்கம் பெற்றார்.

1 More update

Next Story