தேசிய ஜூனியர் தடகளம்: உயரம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை நிவேதாவுக்கு தங்கம்

16 வயதுக்கு உட்பட்ட பிரிவில் உயரம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை நிவேதா தங்கப் பதக்கம் வென்றார்.
தேசிய ஜூனியர் தடகளம்: உயரம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை நிவேதாவுக்கு தங்கம்
Published on: 

சென்னை,

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 41-வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 16 வயதுக்கு உட்பட்ட பிரிவில் உயரம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை நிவேதா 1.52 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கத்தை தனதாக்கினார். மராட்டியத்தின் நைஷா ராகவ் (1.50 மீட்டர்) வெள்ளிப் பதக்கமும், உத்தரபிரதேசத்தின் அங்கிதா (1.48 மீட்டர்) வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 80 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை வர்ஷிகா 11.61 வினாடியில் இலக்கை கடந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். 18 வயதுக்கு உட்பட்ட 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை ராஜஸ்ரீ (14.07 வினாடி) வெண்கலப் பதக்கம் பெற்றார். 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஈட்டி எறிதலில் தமிழக வீராங்கனை கானாஸ்ரீ (39.04 மீட்டர்) வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஆண்களுக்கான 20 வயதுக்கு உட்பட்ட பிரிவில் உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் அம்ப்ரிஷ் 2.18 மீட்டர் தூரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றதுடன், போட்டி சாதனையையும் சமன் செய்தார். 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 110 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீரர் கிரிபால் கார்த்திக் (13.56 வினாடி) வெள்ளிப் பதக்கம் வென்றார். மராட்டியத்தின் யாஷ் முலிக் (13.29 வினாடி) தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com