தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப்: இந்திய வீரர் சாதனை

இறுதிப்போட்டியில் அனிமேஷ் குஜூர், குரிந்தர்வீர் சிங் மீண் டும் சந்திக்க உள்ளனர்.

 தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப்: இந்திய வீரர் சாதனை
Published on

ராஞ்சி,

பெடரேஷன் கோப்பைக்கான 29-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜார் கண்ட் தலைநகர் ராஞ்சியில் நேற்று தொடங்கி யது. இதில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் அரையிறுதி சுற்றில் ஒடிசா வீரர் அனிமேஷ் குஜூர் 10.15 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து குர்ந்தர்வீர் சிங்கின் சாத னையை தகர்த்து புதிய தேசிய சாதனையை மீண்டும் தன்வசப்படுத்தி னார்.

அத்துடன் அவர் இந்த ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான தகுதி இலக்கையும் (10.16 வினாடி) எட்டினார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் அனிமேஷ் குஜூர், குரிந்தர்வீர் சிங் மீண் டும் சந்திக்க உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com