

வதோதரா,
72-வது தேசிய சீனியர் ஆண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று முதல் 27-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் சர்வீசஸ், மராட்டியம், அரியானா, இமாச்சல பிரதேசம், ரெயில்வே உத்தரபிரதேசம் உள்பட 31 அணிகள் கலந்து கொள்கின்றன.
போட்டியில் சதீஷ் கண்ணன் தலைமையில் தமிழக அணி களம் இறங்கு கிறது. அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெறும்.