

சென்னை,
ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் தேசிய இளையோர் தடகள போட்டி மும்பையில் நடந்தது. இதில் ஆண்களுக்கான 17 வயதுக்கு உட்பட்ட பிரிவு நீளம் தாண்டுதலில் சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் மேல்நிலைப்பள்ளி மாணவர் பார்த்தசாரதி 6.62 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். பதக்கம் வென்ற பார்த்தசாரதிக்கு, சாந்தோம் பள்ளி முதல்வர் அருட்சகோதரர் சூசை பரிசு வழங்கி பாராட்டினார்.