

ஆக்லாந்து,
பெண்கள் நேஷன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. 'ஏ' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி நேற்று 3-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் உருகுவேயை சந்தித்தது.
திரில்லிங்கான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக் கில் உருகுவேயை சாய்த்து தொடர்ச்சியாக 3-வது வெற்றியை (ஹாட்ரிக்) பெற்றது.
லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் இந்திய அணி முதலிடமும், அமெரிக்கா 2-வது இடமும், 'பி' பிரி வில் நியூசிலாந்து முதலிடமும், சிலி அணி 2-வது இடமும் பிடித்து அரைஇ றுதிக்கு முன்னேறின.