நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி நாளை நடக்கிறது

இந்தியா-பாகிஸ்தான் சண்டையால் ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து இந்த போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது.
நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி நாளை நடக்கிறது
Published on

பெங்களூரு,

முதலாவது நீரஜ் சோப்ரா கிளாசிக் சர்வதேச ஈட்டி எறிதல் போட்டி பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீவாரா ஸ்டேடியத்தில் கடந்த மாதம் (மே) 24-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தியா-பாகிஸ்தான் சண்டையால் ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து இந்த போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில் நீரஜ் சோப்ரா கிளாசிக் சர்வதேச ஈட்டி எறிதல் போட்டி பெங்களூருவில் ஜூலை 5-ந் தேதி நடைபெறும் என்று போட்டி அமைப்பு குழுவினர் நேற்று அறிவித்தனர். இந்த போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா,ஆண்டர்சன் பீட்டர்ஸ் (கிரனடா), ஒலிம்பிக் முன்னாள் சாம்பியன் தாமஸ் ரோக்லெர் (ஜெர்மனி), முன்னாள் உலக சாம்பியன் ஜூலியஸ் யிகோ (கென்யா) உள்பட 12 வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த போட்டிக்கு ரூ.199 முதல் ரூ.9,999 வரையிலான விலையில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com