

புதுடெல்லி,
சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இப்போது 21 புள்ளி அடிப்படையில் வெற்றி, தோல்வி நிர் ணயிக்கப்படுகிறது. அதாவது ஆட்டத்தின் போது ஒரு செட்டில் எந்த வீரர் 2 புள்ளி வித்தி யாசத்தில் முதலில் 21 புள்ளியை எட்டுகிறாரோ அவர் அந்த செட்டை வென்றதாக அர்த்தம். 3 செட்டுகளில் 2-ஐ கைப்பற்றுபவர் ஆட்டத்தை வசப்படுத்துவார்.
இந்தப் புள்ளி முறையில் மாற்றத்தை கொண்டு வரும் சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் 15×3 என்ற அடிப்படையில் மாற்றி அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. 2027-ம் ஆண்டு ஜன வரி 4-ந்தேதி முதல் புதிய புள்ளி முறையில் போட்டிகள் நடைபெறும்.
இது தொடர்பாக இந்தியாவின் 'நம்பர் ஒன்' இரட்டையர் பிரிவு வீரரான சிராக் ஷெட்டி அவர் கூறியதாவது,
இந்தியாவின் 'நம்பர் ஒன்' இரட்டையர் பிரிவு வீரரான சிராக் ஷெட்டி கூறு கையில்,
15 புள்ளி வடிவம் ஏறக்குறைய 21 புள்ளி முறை போன்றது தான். 21 புள்ளிகள் முறை உங்களது உடல் வலிமையையும், ஆற்றலை யும் சோதிக்கக்கூடியது. இது மிகவும் முழுமையான வடிவமாக இருந்தது. ஆனால் புதிதாக அறிமுகமாகும் 15 புள்ளிகள் முறை முற்றிலும் அதிவே கம் மற்றும் ஆற்றலை சார்ந்ததாக இருக்கும். பந்தை மிக கடுமையாக அடிக்கும் திறனும், அதற்கு ஏற்ற வேகமும் கொண்ட வீரர்களால் இந்த வடிவத்தில் அதே உத்வேகத்தை இறுதிவரை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று கருதுகிறேன். ஆனால் 21 புள்ளி வடிவில் தொடர்ந்து 3 செட்டுகள் வரை அதே வேகத்தை தக்க வைப்பது கடினம். இது எவ்வ ளவு விறுவிறுப்பாக இருக்கும் என்பது எனக்கு தெரியாது. ஓரிரு மாதங் களில் அது நமக்குத் தெரிந்து விடும். ஆனால் ஒன்று மட்டும் உறுதி. ஆட்டத்தின் வேகம் பல மடங்கு அதிகரிக்கும்' என்றார்.
மற்றொரு இந்திய வீரர் பிரனாய் கூறுகையில், '15 புள்ளி முறைக்கு நான் பெரிய ரசிகர் கிடையாது. என்னை பொறுத்தவரை 21 புள்ளி முறையே சிறந்தது என்று சொல்வேன். புதிய வடிவத்தில் ஒற்றையர் ஆட்டங்கள் வெகு சீக்கிரமாக முடிந்து வாய்ப்புள்ளது. அதிக பணம் கொடுத்து போட்டியை பார்க்க வரும் ரசிகர்களுக்கு இது சுவரசியமாக இருக்குமா என்பது தெரியவில்லை' என்றார்.