நார்வே செஸ் தொடர் : 3-வது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி

ஆனந்த் மூன்றாவது சுற்றில் சீனாவின் வாங் ஹாவை வீழ்த்தினார்.
Image Courtesy : AFP 
Image Courtesy : AFP 
Published on

நார்வே,

இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் நார்வேயில் தற்போது நடைபெற்று வரும் பிலிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்றுள்ளார். இத்தொடரில் விஸ்வநாதன் ஆனந்த் 10 வீரர்கள் மோதும் கிளாசிக்கல் சுற்றில் விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற கிளாசிக்கல் பிரிவில் மூன்றாவது சுற்றில் சீனாவின் வாங் ஹாவை தோற்கடித்து புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இந்த தொடரில் முதல் இரண்டு சுற்றுகளில் பிரான்ஸ் வீரர் மாக்சிம் வச்சியர்-லாக்ரேவ் மற்றும் வெசெலின் டோபலோவ் (பல்கேரியா) ஆகியோரை வீழ்த்திய பிறகு, கிளாசிக்கல் பிரிவில் ஆனந்த் மூன்றாவது தொடர்ச்சியான வெற்றியை பதிவு செய்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com