

ஆஸ்லோ,
14-வது நார்வே சர்வதேச செஸ் போட்டி ஆஸ்லோ நகரில் நடந்து வரு கிறது. இதில் 6 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் தங்க ளுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதலிடம் பிடிக் கும் வீரர், வீராங்கனை மகுடம் சூடுவார்.
இந்த நிலையில் ஓபன் பிரிவில் 4-வது சுற் றில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சென்ட் கீமருடன் மோதினார். கருப்பு நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 46-வது நகர்த் தலில் 'டிரா' செய்தார். பின்னர் முடிவை அறிய கடைபிடிக்கப்பட்ட ஆர்ம கேட்டன் முறையில் பிரக்ஞானந்தா 17-வது நகர்த்தலில் வெற்றி கண்டு 1.5 புள்ளியை பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' வீரரும், நடப்பு சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) 42-வது காய் நகர்த்தலில் உலக சாம்பியனான இந்தியாவின் குகேசை தோற்கடித்தார்.