ஒலிம்பிக் தீபம் தொடர் ஓட்டம் இன்று தொடக்கம்

ஒலிம்பிக் தீபம் தொடர் ஓட்டம் இன்று தொடங்குகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

டோக்கியோ,

கொரோனா அச்சுறுத்தலால் ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது.

இதையொட்டி ஒலிம்பிக் தீபத்தின் தொடர் ஓட்டம் நிகழ்ச்சி ஜப்பானின் வடகிழக்கு நகரமான புகுஷிமாவில் இன்று தொடங்குகிறது. 2011-ம் ஆண்டு பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜப்பான் அணி மகுடம் சூடிய போது, அந்த அணிக்கு பயிற்சி அளித்த நோரியோ சசாகி முதல் நபராக தீபத்தை ஏந்தி செல்கிறார்.

முதல் நாளில் 15 பேர் தீபத்துடன் ஓட உள்ளனர். ஜப்பான் முழுவதும் 47 மாகாணங்களுக்கு மொத்தம் 121 நாட்கள் இந்த தீபம் பயணிக்கிறது. இதை 10 ஆயிரம் பேர் தொடர் ஓட்டமாக எடுத்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக தீபம் ஓட்டம் பெருத்த ஆர்ப்பரிப்புடன் வெகுவிமரிசையாக நடைபெறும்.

ஆனால் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே தொடர் ஓட்ட நிகழ்ச்சியை பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். அதுவும் சமூக இடைவெளி, கட்டாயம் முககவசம் அணிவது உள்ளிட்ட பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com