

புதுடெல்லி,
இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய அரிய கலையான யோகாவை உலகமெங்கும் பரப்பும் நல்லெண்ணத்தில் பிரதமர் மோடி ஐ.நா. பொதுச்சபையில் 2014ம் ஆண்டு செப்டம்பர் 27ந்தேதி பேசினார்.
அதனை தொடர்ந்து உலக நாடுகளின் ஒருமித்த ஆதரவுடன் ஆண்டுதோறும் ஜூன் 21ந்தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடுவது என முடிவு எடுக்கப்பட்டது. முதல் சர்வதேச யோகா தினம், கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 21ந்தேதி கொண்டாடப்பட்டது.
கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமலில் இருப்பதால், 7வது சர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் மிக எளிமையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதுபற்றி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வீரேந்தர் சேவாக் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், என்னுடைய பீடத்தில் நான் நிற்கிறேன். நான், இறை வணக்கம் செலுத்தும் வகையில் நிற்கின்றேன்.
யோகா மற்றும் தியானம் ஆகியவை உலகிற்கு இந்தியா அளித்த குறிப்பிடத்தக்க பரிசுகளில் ஒன்று என தெரிவித்து உள்ளார். இதேபோன்று மத்திய இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ, யோகா செய்யும் தனது புகைப்படங்களை டுவிட்டரில் வெளியிட்டு வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.