பாரா ஆசிய விளையாட்டு: தொடக்க ஆட்டத்தில் பவினா பட்டேல் வெற்றி

18 விளையாட்டுகளில் மொத்தம் 489 பந்த யங்கள் நடத்தப்படுகிறது.
பாரா ஆசிய விளையாட்டு: தொடக்க ஆட்டத்தில் பவினா பட்டேல் வெற்றி
Published on: 

டோக்கியோ,

மாற்றுத் திறனாளிகளுக்கான 5-வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயாவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 24-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டி சமீபத்தில் ஆசிய விளையாட்டு போட்டி அரங்கேறிய நகோயாவில் உள்ள மிசுஹோ ஸ்டேடியத்தில் நாளை மாலை (இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணி) அதிகாரபூர்வமாக தொடங்குகிறது. இந்த போட்டியில் 18 விளையாட்டுகளில் மொத்தம் 489 பந்த யங்கள் நடத்தப்படுகிறது. ஆசிய கண்டத்தை சேர்ந்த 45 நாடுகளில் இருந்து சுமார் 3,000 வீரர், வீராங்கனைகள் பங் ' கேற்கிறார்கள். தொடக்க விழாவுக்கு முன்பாகவே பேட்மிண்டன், கால்பந்து (5 பேர் கொண்ட அணி). டேபிள் டென்னிஸ், வீல்சேர் கூடைப்பந்து போன்ற போட்டிகள் ஆரம்பமாகி விட்டன.

இதில் டேபிள் டென்னிசில் பெண்களுக்கான ஒற்றையர் 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை பவினா பட்டேல் (கிளாஸ் 4-5) 11-6, 11-3, 11-6 என்ற நேர்செட் டில் குவைத்தின் அஹத் அல்ஷீடியை தோற்கடித்து போட்டியை வெற்றியுடன் தொடங்கினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com