

புதுடெல்லி,
மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா உலக வில்வித்தை தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இதில் பெண்களுக்கான காம்பவுண்ட் ஓபன் பிரிவில் 16 வயதான இந்திய வீராங்கனை ஷீதல் தேவி 'நம்பர் ஒன்' இடத்தை பிடித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த பாரா ஆசிய விளையாட்டில் 2 தங்கப்பதக்கங்கள் வென்றதன் மூலம் அவர் 2 இடங்கள் முன்னேறி 'நம்பர் ஒன்' இடத்தை பிடித்துள்ளார்.