பாரா ஒலிம்பிக் நிறைவு விழா; தேசிய கொடியை ஏந்திச்செல்லும் ஹர்விந்தர் சிங், பிரீத்தி பால்

மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது
Image Courtesy : கோப்புப்படம் / @Paralympics
Image Courtesy : கோப்புப்படம் / @Paralympics
Published on

பாரீஸ்,

மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கிய பாரா ஒலிம்பிக் தொடர் நாளை வரை நடைபெறுகிறது.

இந்த தொடரில் இந்தியா இதுவரை 6 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் இந்தியா 17வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், இந்த தொடரின் நிறைவு விழா நாளை இரவு அரங்கேறுகிறது.

நிறைவு விழா அணிவகுப்பில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை வில்வித்தை வீரர் ஹர்விந்தர் சிங் மற்றும் தடகள வீராங்கனை பிரீத்தி பால் ஆகியோர் ஏந்தி செல்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இந்திய குழுவின் தலைவர் சத்யபிரகாஷ் சங்வான் நேற்று அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com