பாரீஸ் ஒலிம்பிக்: தொடக்க விழா அணிவகுப்பில் சரத்கமல் தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்

பாரீஸ் ஒலிம்பிக் தொடக்க விழா அணிவகுப்பில் இந்திய அணிக்கு சரத்கமல் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்.
பாரீஸ் ஒலிம்பிக்: தொடக்க விழா அணிவகுப்பில் சரத்கமல் தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்
Published on

புதுடெல்லி,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ந்தேதி முதல் ஆகஸ்டு 11-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியின் தொடக்க விழா அணிவகுப்பில் இந்திய அணிக்கு டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்வார் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் நேற்று அறிவித்தது.

தமிழகத்தை சேர்ந்த 41 வயதான சரத்கமல் கூறுகையில், 'இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். இது எனது 5-வது மற்றும் கடைசி ஒலிம்பிக் போட்டியாக இருக்கப்போகிறது. இத்தகைய கவுரவம் டேபிள் டென்னிசில் நிறைய வீரர்களுக்கு கிடைத்ததில்லை' என்று குறிப்பிட்டார்.

மேலும், ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய குழுவின் தலைவராக முன்னாள் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com