கோவாவில் 37-வது தேசிய விளையாட்டு போட்டி - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

கோவாவில் 37-வது தேசிய விளையாட்டு போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
கோவாவில் 37-வது தேசிய விளையாட்டு போட்டி - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
Published on

பனாஜி,

37-வது தேசிய விளையாட்டு போட்டி கோவா படோர்டாவில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நேற்று கண்கவர் கலைநிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். 

இந்த விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், 'விளையாட்டு வீரர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டங்களில் நாங்கள் நிறைய மாற்றங்கள் கொண்டு வந்துள்ளோம். கடந்த 9 ஆண்டுகளில் விளையாட்டு துறைக்கு செலவிடப்படும் தொகை 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. நமது நாட்டில் விளையாட்டு திறமைக்கு பஞ்சம் கிடையாது. நம் நாடு பல விளையாட்டு சாம்பியன்களை உருவாக்கி இருக்கிறது. 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த நாம் தயாராக இருக்கிறோம்' என்று தெரிவித்தார். கோவா முதல்-மந்திரி பிரமோத் சவாந்த், மத்திய விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்குர் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த விளையாட்டு போட்டி அடுத்த மாதம் 9-ந்தேதி வரை கோவாவில் நடக்கிறது. அங்கு 5 இடங்களில் நடைபெறும் இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். தடகளம், நீச்சல், துப்பாக்கி சுடுதல், கூடைப்பந்து, கபடி, குத்துச்சண்டை, கைப்பந்து, மல்யுத்தம், யோகாசனம் உள்பட 43 வகையான விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் இருந்து 446 பேர் கொண்ட குழு அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com