பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு

பாரா ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் இந்தியா மொத்தம் 111 பதக்கங்களை வென்றது.
பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு
Published on

புது டெல்லி,

மாற்றுத்திறனாளிகளுக்கான 4வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா 29 தங்கம், 31 வெள்ளி, 51 வெண்கலம் என மொத்தம் 111 பதக்கங்களை வென்றது. ஆசிய விளையாட்டு போட்டியில் முதல்முறையாக 100 பதக்கங்களை எட்டி வரலாறு படைத்த இந்திய அணியினரை டெல்லியில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் பிரதமர் மோடி நேற்று சந்தித்து பாராட்டியதுடன் அவர்களுடன் உற்சாகமாக கலந்துரையாடினார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியது பின்வருமாறு;- 'உங்களை சந்திப்பதற்கான வாய்ப்புகளை நான் தொடர்ந்து தேடினேன். இன்று உங்களுடன் இருப்பதை நான் பாக்கியமாக உணர்கிறேன், ஆசிய பாரா போட்டியில் நீங்கள் சிறப்பாக விளையாடியதற்கு உங்களை வாழ்த்துவதற்காக மட்டுமே நான் இங்கு வந்துள்ளேன். நீங்கள் சீனாவில் நாட்டிற்காக போட்டியிட்டபோது, உங்கள் பொன்னான மற்றும் மறக்க முடியாத தருணங்களை நான் உணர்ந்தேன். உங்கள் செயல்பாடுகள் எங்களை பெருமையில் ஆழ்த்தியுள்ளது' என பாராட்டியுள்ளார். 

மேலும் இது குறித்து பிரதமர் தனது எக்ஸ் தளத்திலும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com