உலக வில்வித்தை இந்தியா சாதனை;தீபிகா குமாரி சர்வதேச அரங்கில் மீண்டும் நம்பர் 1

வில்வித்தை உலகக் கோப்பையில் இந்திய வீரர்களின் அற்புதமான விளையாட்டிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
உலக வில்வித்தை இந்தியா சாதனை;தீபிகா குமாரி சர்வதேச அரங்கில் மீண்டும் நம்பர் 1
Published on

பாரிஸ்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற உலக கோப்பை வில்வித்தை போட்டியில் (மூன்றாம் நிலை) ஒற்றையர், மகளிர் மற்றும் கலப்பு அணி என மூன்று விதமான போட்டிகளிலும் பங்கேற்ற அவர், அதில் தங்கம் வென்றுள்ளார். குறிப்பாக ஒற்றையர் ரீகர்வ் பிரிவில் தங்கம் வென்றதன் மூலம் மீண்டும் சர்வதேச அரங்கில் நம்பர் 1 வில்வித்தை வீராங்கனை என்ற அந்தஸ்தை எட்டியுள்ளார்.

ஒரே நாளில் வில்வித்தையில் ஹாட்ரிக் தங்கப்பதக்கங்களை வென்று சாதித்துள்ளார் இந்தியாவின் தீபிகா குமாரி.

வில்வித்தை போட்டியில் இறுதியில், இந்தியா 8 பதக்கங்களுடன் (1 வெண்கலம்) புள்ளி பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.

பாரிஸில் நடந்த வில்வித்தை உலகக் கோப்பையில் இந்திய வீராங்கனைகளின் அற்புதமான பங்களிப்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டில்

கடந்த சில நாட்களாக உலகக் கோப்பையில் நமது வீராங்கனைகள் அற்புதம் நிகழ்த்தி வருவதை கண்டு வருகிறோம் . இந்தத் துறையில் வரவிருக்கும் வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் தீபிகா, அங்கிதா பகத், கோமலிகா பாரி, அதானு தாஸ் மற்றும் ஆபிஷேக் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் என்று நரேந்திர மோடி டுவீட் செய்துள்ளார் .

அதுபோல் ரசிகர்களுக்கு தன் நன்றியை தெரிவித்துள்ளார் தீபிகா குமாரி. உங்கள் அன்புக்கும், ஆசீர்வாதத்திற்கும் எனது நன்றி. என் மீது நீங்கள் வைத்த நம்பிக்கைக்கும் நன்றி என தெரிவித்துள்ளார் தீபிகா குமாரி.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com