செஸ் உலகக்கோப்பை: தமிழக வீரர் பிரக்ஞானந்தா அரையிறுதிக்கு தகுதி பெற்று அசத்தல்

செஸ் உலகக் கோப்பை போட்டியில் அர்ஜூன் எரிகைசியை வீழ்த்தி பிரக்ஞானந்தா அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
Image Courtacy: FIDETwitter
Image Courtacy: FIDETwitter
Published on

பெக்கு,

உலகக் கோப்பை செஸ் போட்டி அசர்பைஜான் நாட்டின் பெக்கு நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 30ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 206 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில் இந்த தொடரில் காலிறுதி சுற்றில் சக இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசியுடன் தமிழக வீரர் பிரக்ஞானந்தா மோதினார். பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் 7 டைபிரேக் ஆட்டங்களுக்குப் பிறகு பிரக்ஞானந்தா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

டை-பிரேக்கரை வென்றால், உலகக் கோப்பையின் அரையிறுதியில் பிரக்ஞானந்தா நான்காவது வீரராக இடம்பெற்றார். மேக்னஸ் கார்ல்சன் கேண்டிடேட்சில் விளையாடுவதில் தனக்கு விருப்பமில்லை என்று அறிவித்துள்ள நிலையில், உலக சாம்பியனான டிங் லிரனுக்கு சவாலாக இருக்கும் கேண்டிடேட்ஸ் போட்டியில் பிரக்ஞானந்தாவுக்கு இடம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

அடுத்து நடைபெறும் அரையிறுதி சுற்றில் பேபியானோ கருவானாவை பிரக்ஞானந்தா எதிர்கொள்ள உள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com