

பிராக்,
பிராக் சர்வதேச செஸ் தொடர் செக்குடியரசில் நடந்து வருகிறது. இதில் 9 சுற்றுகளை கொண்ட மாஸ்டர்ஸ் பிரிவில் 10 வீரர்கள் கலந்து கொண்டு மோதுகின்றனர். இதன் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், ஜோர்டான் வான் பாரஸ்டை (நெதர்லாந்து) எதிர் கொண்டார். கருப்பு நிற காய்களுடன் ஆடிய குகேஷ் 48-வது நகர்த்தலில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவர் முதல் 2 ஆட்டங்களில் டிரா கண்டு இருந்தார்.
மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், இந்திய வீரருமான அரவிந்த் சிதம்பரம், ஈரானின் பர்ஹாம் மக்சூட்லூவை சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் ஆடிய அரவிந்த் சிதம்பரம் 30-வது நகர்த்தலில் டிரா கண்டார்.