பிராக் மாஸ்டர்ஸ் செஸ்: 8 சுற்றுகள் முடிவில் இந்திய வீரர் அரவிந்த் சிதம்பரம் முதலிடம்


பிராக் மாஸ்டர்ஸ் செஸ்: 8 சுற்றுகள் முடிவில் இந்திய வீரர் அரவிந்த் சிதம்பரம் முதலிடம்
x

image courtesy:twitter/@PragueChess

மற்றொரு இந்திய வீரரான பிரக்ஞானந்தா 2-வது இடத்தில் உள்ளார்.

பிராக்,

7-வது பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக்குடியரசு நாட்டில் நடந்து வருகிறது. 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உள்பட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில் இதுவரை 8 சுற்றுகள் முடிவடைந்துள்ளன. இதன் முடிவில் இந்திய வீரர் அஸ்வின் சிதம்பரம் 5.5 புள்ளுகளுடன் முதலிடத்திலும், மற்றொரு இந்திய வீரரான பிரக்ஞானந்த 5 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். சீனாவின் வெய் யி 4.5 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். இன்னும் ஒரு ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ளதாக் இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Next Story