சென்னையில் புரோ பீச் வாலிபால் போட்டி

கோப்புப்படம்
புரோ பீச் வாலிபால் தொடர் உலகம் முழுவதும் 18 நாடுகளில் நடக்கிறது.
சென்னை,
புரோ பீச் வாலிபால் தொடர் உலகம் முழுவதும் 18 நாடுகளில் நடக்கிறது. இதன் ஒரு பகுதியான சென்னை சேலஞ்ச் பீச் வாலிபால் போட்டி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வடநெம்மேலியில் அமைந்துள்ள இன்டர்கான்டினென்டல் ஓட்டலையொட்டிய கடற்கரையில் வருகிற 21-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நடக்கிறது.
மொத்தம் ரூ.1.68 கோடி பரிசுத்தொகைக்கான இந்த போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆண்கள் பிரிவில் 24 அணிகளும், பெண்கள் பிரிவில் 24 அணிகளும் பங்கேற்கின்றன. 4 ஆடுகளங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை போட்டி நடைபெறும். இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி களம் இறங்குவதால் உள்ளூர் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும். போட்டியை யூரோ ஸ்போர்ட் டெலிவிஷன் சேனல் ஒளிபரப்பு செய்கிறது. பேன்கோடு செயலியிலும் பார்க்கலாம்.
Related Tags :
Next Story






