

ஹோபர்ட்,
9 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது புரோ ஆக்கி லீக் தொடர் பலவேறு நாடுகளில் நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் நேற்று நடந்த ஆட்டத்தில் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள இந்திய அணி, 3-வது இடம் வகிக்கும் ஆஸ்திரேலியாவை எதிர்கொண் டது.
இந்த ஆட்டத்தில் வழக்கமான நேரம் முடிவில் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. இதையடுத்து வெற்றி, தோல்வியை நிர்ண யிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித் தது.