புரோ கபடியில் அரியானாவுடன் இன்று மோதல் - தமிழ் தலைவாஸ் அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா?

புரோ கபடியில் அரியானா அணியுடன், தமிழ் தலைவாஸ் அணிக்கு இன்று மோத உள்ளது.
புரோ கபடியில் அரியானாவுடன் இன்று மோதல் - தமிழ் தலைவாஸ் அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா?
Published on

கொல்கத்தா,

6-வது புரோ கபடி லீக் தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இரவு 8 மணிக்கு கொல்கத்தாவில் நடக்கும் ஒரு ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, அரியானா ஸ்டீலர்சை சந்திக்கிறது. தமிழ் தலைவாஸ் அணிக்கு இது கடைசி லீக் ஆட்டமாகும். ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து பி பிரிவில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட தமிழ் தலைவாஸ் அணி (5 வெற்றி, 13 தோல்வி, 3 டை) ஆறுதல் வெற்றியுடன் முடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இதே மைதானத்தில் இரவு 9 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்- தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com