புரோ கபடி லீக்: குஜராத்தை வீழ்த்திய பெங்களூரு புல்ஸ்

Image Courtesy: @ProKabaddi
12-வது புரோ கபடி லீக் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது.
புதுடெல்லி,
12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.
இந்த மோதலில் தொடக்கம் முதலே அபாரமாக ஆடிய பெங்களூரு அணி 54-26 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2வது ஆட்டத்தில் உ.பி.யோத்தாஸ் - யு மும்பா அணிகள் மோதின.
தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த மோதலில் உ.பி.யோத்தாஸ் அணி 35-32 என்ற புள்ளிக்கணக்கில் யு மும்பாவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.
Related Tags :
Next Story






