புரோ கபடி லீக்; பெங்களூரு புல்ஸ் - யு மும்பா அணிகள் இன்று மோதல்

இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் மோத உள்ளன.
Image Courtesy: @ProKabaddi
Image Courtesy: @ProKabaddi
Published on

புதுடெல்லி,

10-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் இரவு 8 மணிக்கு புதுடெல்லியில் நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - யு மும்பா அணிகள் மோத உள்ளன. இதையடுத்து இரவு 9 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் மோத உள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com