புரோ கபடி லீக்; தபாங் டெல்லி - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் இன்று மோதல்..!

12 அணிகள் பங்கேற்றுள்ள புரோ கபடி லீக் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
Image Courtesy: @DabangDelhiKC / @GujaratGiants
Image Courtesy: @DabangDelhiKC / @GujaratGiants
Published on

நொய்டா,

10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த மாதம் 2-ந்தேதி தொடங்கி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று இரவு ஒரு ஆட்டம் நடைபெற உள்ளது. அதில் இரவு 8 மணிக்கு நொய்டாவில் நடைபெறும் ஆட்டத்தில் தபாங் டெல்லி - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோத உள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com