புரோ கபடி லீக்; உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்தி தபாங் டெல்லி அணி வெற்றி..!

10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
Image Courtesy: @DabangDelhiKC
Image Courtesy: @DabangDelhiKC
Published on

நொய்டா,

10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்த தொடரில் இன்று இரவு 9 மணிக்கு நொய்டாவில் நடைபெற்ற ஆட்டத்தில் தபாங் டெல்லி - உ.பி.யோத்தாஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தபாங் டெல்லி அணி 35-25 என்ற புள்ளிக்கணக்கில் உ.பி. யோத்தாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com