புரோ கபடி லீக்: புனேரி பால்டன் - தமிழ் தலைவாஸ் அணிகள் இன்று மோதல்

இன்று இரவு நடைபெற உள்ள ஆட்டத்தில் புனேரி பால்டன் - தமிழ் தலைவாஸ் அணிகள் மோத உள்ளன.
புரோ கபடி லீக்: புனேரி பால்டன் - தமிழ் தலைவாஸ் அணிகள் இன்று மோதல்
Published on

மும்பை,

10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த மாதம் 2-ந்தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்த தொடரில், மும்பையில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில் புனேரி பால்டன் - தமிழ் தலைவாஸ் அணிகள் மோத உள்ளன. தொடர்ந்து இரவு 9 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோத உள்ளன. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com