புரோ கபடி லீக்; உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்தி புனேரி பால்டன் வெற்றி..!

12 அணிகள் கலந்து கொண்டுள்ள புரோ கபடி லீக் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
Image Courtesy: @UpYoddhas
Image Courtesy: @UpYoddhas
Published on

நொய்டா,

10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த மாதம் 2-ந்தேதி தொடங்கி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்த தொடரில் இன்று இரவு 9 மணிக்கு நொய்டாவில் நடைபெற்ற ஆட்டத்தில் உ.பி.யோத்தாஸ் - புனேரி பால்டன் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 40-31 என்ற புள்ளிக்கணக்கில் உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்தி புனேரி பால்டன் வெற்றி பெற்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com