புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ், பிங்க் பாந்தர்ஸ் அணிகள் வெற்றி

நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் பிங்க் பாந்தர்ஸ் அணி மற்றும் தபாங் டெல்லி அணிகள் மோதின.
புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ், பிங்க் பாந்தர்ஸ் அணிகள் வெற்றி
Published on

பெங்களூரு,

12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 90-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி மற்றும் தபாங் டெல்லி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 36-30 என்ற புள்ளி கணக்கில் டெல்லியை வீழ்த்தி 7-வது வெற்றியை ருசித்தது.

மற்றொரு லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் சந்தித்தன. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தமிழ் தலைவாஸ் 43-25 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை எளிதில் தோற்கடித்து 5-வது வெற்றியை தனதாக்கியது.

இன்றைய லீக் ஆட்டங்களில் அரியானா ஸ்டீலர்ஸ்-பெங்கால் வாரியர்ஸ் (7.30 மணி), தபாங் டெல்லி-பெங்களூரு புல்ஸ் (இரவு 8.30 மணி), குஜராத் ஜெயன்ட்ஸ்-பாட்னா பைரட்ஸ் (இரவு 9.30 மணி) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com