புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் தோல்வி

இரவு 9 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - புனேரி பால்டன் அணிகள் மோதின
புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் தோல்வி
Published on

புதுடெல்லி,

புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்ததொடரில் சென்னையில் நடந்து வந்த லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்தன. இந்நிலையில், அடுத்த கட்ட ஆட்டங்கள் டெல்லியில் இன்று தொடங்கியது .

இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. அதன்படி இரவு 8 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ்- ஜெயப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மோதின. இந்த ஆட்டத்தில் பெங்களூரு 47-26 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இரவு 9 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - புனேரி பால்டன் அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் 23-36 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் தோல்வியடைந்தது. தமிழ் தலைவாஸ் அணிக்கு இது 7வது தோல்வியாகும். புள்ளி பட்டியலில் தமிழ் தலைவாஸ் கடைசி இடத்தில் உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com