புரோ கபடி லீக்; தமிழ் தலைவாஸ் - உ.பி.யோத்தாஸ் அணிகள் இன்று மோதல்

இன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோத உள்ளன.
Image Courtesy: @ProKabaddi / @tamilthalaivas
Image Courtesy: @ProKabaddi / @tamilthalaivas
Published on

நொய்டா,

11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்தில் நடந்து முடிந்தன. இதையடுத்து தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதில் இரவு 8 மணிக்கு தொடங்கும் முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - உ.பி.யோத்தாஸ் அணிகள் மோத உள்ளன. தொடர்ந்து இரவு 9 மணிக்கு தொடங்கும் 2வது ஆட்டத்தில் தபாங் டெல்லி - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோத உள்ளன.

இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் தபாங் டெல்லி 6வது இடத்திலும், பாட்னா பைரேட்ஸ் 7வது இடத்திலும், உ.பி.யோத்தாஸ் 8வது இடத்திலும், தமிழ் தலைவாஸ் 9வது இடத்திலும் உள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com