புரோ கபடி லீக்: குஜராத்தை வீழ்த்தி தெலுங்கு டைட்டன்ஸ் வெற்றி


புரோ கபடி லீக்: குஜராத்தை வீழ்த்தி தெலுங்கு டைட்டன்ஸ் வெற்றி
x

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.

புதுடெல்லி,

12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது. இதில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 30-25 என்ற புள்ளி கணக்கில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

தொடர்ந்து நடைபெற்று வரும் 2-வது ஆட்டத்தில் யு மும்பா- அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதி வருகின்றன. அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ்- புனேரி பால்டன் அணிகள் மோதுகின்றன.

1 More update

Next Story