புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் - யு மும்பா அணிகள் இன்று மோதல்

இன்று நடைபெறும் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - யு மும்பா அணிகள் மோத உள்ளன.
image courtesy: Telugu Titans twitter
image courtesy: Telugu Titans twitter
Published on

லக்னோ,

10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்த தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - யு மும்பா அணிகள் மோத உள்ளன. இதையடுத்து இரவு 9 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் உ.பி. யோத்தாஸ் - தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com